காதலி மீது ஆசிட் வீச்சு

Written by vinni   // November 18, 2013   //

asidடெல்லியில் தன்னை திருமணம் செய்ய மறுத்த இளம் பெண் மற்றும் அவரது தோழி மீது வாலிபர் ஒருவர் ஆசிட் ஊற்றியுள்ளார்.
மேற்கு டெல்லியில் உள்ள பேகம்பூரைச் சேர்ந்தவர் பார்வதி(18). அவரிடம் மனோஜ் என்பவர் தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் பார்வதி மறுத்துள்ளார். இந்நிலையில் பார்வதி தனது தோழி காயத்ரியுடன்(16) சேர்ந்து நேற்று மாலை மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்களை வழிமறித்த மனோஜ் அவர்கள் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதில் பார்வதிக்கு 50 சதவீத காயங்களும், காயத்ரிக்கு 20 சதவீத காயங்களும் ஏற்பட்டது.

முதலில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் பின்னர் லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் மனோஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து புகார் செய்த பார்வதியின் தாய் தனது மனுவில், மனோஜ் எனது மகளுக்கு பல காலமாக தொல்லை கொடுத்து வந்தான். இது தொடர்பாக நாங்கள் பொலிசில் புகார் கொடுத்தோம்.

பொலிசார் அவனை பிடித்து அடித்த பிறகு என் மகளை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றான். ஆனால் அவள் மார்க்கெட்டுக்கு சென்றபோது அவள் மீது ஆசிட் ஊற்றிவிட்டான் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.