சோனியா காந்தி மீது ரூ.10 கோடி கேட்டு வழக்கு தொடரப்படும் – சிவராஜ் சிங் சவுகான்

Written by vinni   // November 18, 2013   //

17806d1e-5f7c-4e50-89cd-f74200918000_S_secvpf230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு வரும் 25–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் மத்தியபிர தேசத்தில் சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்காக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதில் முதல் மந்திரி வீட்டில் பணம் எண்ணும் எந்திரம் இருப்பது போலவும் காண்டிராக்ட் பணிகளுக்கு அவரும் அவர் மனைவி சத்னாவும் பணம் வாங்கி குவிப்பது போலவும் எழுதப்பட்டிருந்தது. சோனியா கூட்டத்தில் பேசும் போதும் அந்த விளம்பரத்தில் இருப்பது போன்றே பேசினார்.

இதற்கு மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று அவரும் அவர் மனைவி சத்னாவும் வக்கீல் நோட்டீசு ஒன்றை சோனியாவுக்கு அனுப்பினார்கள்.

அதில் அவர்கள் நீங்கள் (சோனியா) கொடுத்த விளம்பரத்தால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

இல்லையெனில் உங்கள் மீது ரூ.10 கோடி கேட்டு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளனர்.


Similar posts

Comments are closed.