உலகின் சிறந்த வீரர் சச்சின்: முரளிதரன்

Written by vinni   // November 18, 2013   //

sachinmurali300தெண்டுல்கரின் ஓய்வு குறித்து இலங்கையை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் கூறியதாவது:–

நவீன கிரிக்கெட்டில் சிறந்தவர் சச்சின் தெண்டுல்கர். இந்தப்போட்டியை மிகவும் நேசித்தவர். அர்ப்பணிப்பு உணர்வோடு ஆடுபவர். 1992–ல் நான் விளையாட தொடங்கினேன். அதுமுதல் தற்போது வரை நான் பார்த்த வீரர்களில் சச்சின் தான் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன்.

பிராட்மேன் ஆட்டத்தை நான் பார்த்தது இல்லை. சராசரி என்று எடுத்தால் பிராட்மேன் சிறந்தவர். சாதனை என்று எடுத்தால் அதில் சச்சின் தான் சிறந்தவர். 24 ஆண்டுகள் விளையாடியதே அவரது சாதனைகளை சொல்லும். கிரிக்கெட்டின் உண்மையாக ஜென்டில்மேன் அவர் தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் முரளிதரன். டெஸ்டில் 800 விக்கெட்டும் (133 போட்டி) ஒருநாள் போட்டியில் 534 விக்கெட்டும் (350 ஆட்டம்) கைப்பற்றியுள்ளார்.


Similar posts

Comments are closed.