புலிகள் யுத்தத்தில் வெற்றியீட்டுவார்கள் என மேற்குலக நாடுகள் எதிர்பார்த்தது – கெஹலிய ரம்புக்வெல்ல

Written by vinni   // November 18, 2013   //

Keheliya-Rambukwellaசர்வதேச சமூகத்தினால் சுமத்தப்பட்டு வரும் சகல குற்றச்சாட்டுக்களுக்கும் கேள்விகளுக்கும் உண்மைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பதில் உண்டு என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் 289 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் பல குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட குறுங்கால யோசனைகள் அனைத்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கால அடிப்படையில் பரிந்துரை செய்ய்பட்ட யோசனைத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், சில பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில பரிந்துரைகளை அமுல்படுத்த நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு  உலக நாடுகள் மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோல்வியைத் தழுவிய காரணத்தினால் மேற்குலக நாடுகள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகள் யுத்தத்தில் வெற்றியீட்டுவார்கள் என மேற்குலக நாடுகள் எதிர்பார்த்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் மக்களின் அழுத்தம் காரணமாக இலங்கை மீது மேற்குலக நாடுகள் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.