அமெரிக்காவில் கடும் சூறாவளி : 5 பேர் பலி: நூற்றுக்கணக்கானவர்கள் காயம்

Written by vinni   // November 18, 2013   //

sandy-caribbean_2381029bஅமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களில் கடும் சூறாவளிப் புயல் வீசியது. இதனால் இல்லினாய்ஸ், இண்டியானா, கண்டக்கி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இங்கு மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் கடுமையாக காற்று வீசியது. இதனால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைகுப்புற வீசி அடிக்கப்பட்டன. சில இலகு ரக வாகனங்கள் காற்றில் பரந்தன.

‘டன்’ கணக்கில் குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பலத்த சூறாவளி புயலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

டெலிவோன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பல டெலிபோன் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால் டெலிபோன் இணைப்புகள், செல்போன் சேவைகள் முற்றிலும் முடங்கின.

சூறாவளி புயலுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. அப்போது டென்னிஸ் பந்து அளவில் ஐஸ்கட்டிகள் விழுந்தன. இந்த புயலுக்கு இல்லினாய்ஸ் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

இங்கு மட்டும் சூறாவளிப் புயலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். வாஷிங்டனில் ஒருவரும், தெற்கு மால்சேக் பகுதியில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் தவிர சூறாவளி புயலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர்.

சூறாவளி புயலினால் சுமார் 5½ கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இல்லினாய்ஸ் மாகாணம் ஒரு போர்க்களம் போன்று காட்சி அளிக்கிறது. இது போன்ற பாதிப்புகள் தான் இண்டியானா மற்றும் கண்டக்கியில் ஏற்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.