பொல்லுக்கொடுத்து அடிவாங்கியுள்ள அரசாங்கம்

Written by vinni   // November 18, 2013   //

downloadகெலும் மக்ரே உள்ளிட்ட சனல் 4 ஊடகவியலாளர்களை இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கி இலங்கை அரசாங்கம், வாங்கி கட்டிக்கொண்டதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல்4 தொலைக்காட்சி மேற்கொண்டு வருவது பொய்யான நடவடிக்கை என்று அரசாங்கம் சொல்ல வேண்டும். அவ்வளவுதான். எடுப்பதற்கு வேறு எந்த நடவடிக்கைகளும் இல்லை.

சனல்4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை வரவழைத்தமை முட்டாள்தானமான நடவடிக்கை.

அவர்களை வரவழைத்து அரசாங்கம் வாங்கிக் கட்டிக்கொண்டதே தவறானது. உலகம் அரசாங்கத்திற்கு சொன்னதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?. அரசாங்கம் கூறியதை உலகம் ஏற்றுக்கொள்ளுமா? என்பது எமக்கு தெரியாது என்றார்.


Similar posts

Comments are closed.