இதயத்தை உறைய வைக்கும் கொடூர போர் குற்றம், மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன‌ – டேவிட் கேமரூன்

Written by vinni   // November 18, 2013   //

David-Cameron-007இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு புறப்பட்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கையில் வடக்கு பகுதியில் சில இடங்களில் கண்ணி வெடி பிரச்சினை இருக்கிறது. இவற்றை அகற்றும் பணிகளுக்காக அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரூ. 21 கோடி நிதி உதவி வழங்கப்படும்.

ஆபத்து நிறைந்த கண்ணி வெடிகளை அகற்றி விட்டு அந்த நிலங்களை உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்படும். யாழ்ப்பாணம், கிளி நொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் கண்ணி வெடிகளை அகற்ற இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கண்ணிவெடி அகற்றப்பட்ட நிலங்களை பொது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தலாம். இறுதி கட்ட போருக்கு பிறகு பிரிந்து கிடப்போர் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கும் ஆதரவாகவும் இந்த நிதி வழங்கப்படுகிறது.

இறுதி கட்ட போரின் போது இந்த பகுதிகளில் கண்ணி வெடிகளை புதைத்துள்ளனர். இவற்றை அகற்றுவது சிக்கல் நிறைந்த பணி.

இந்த நிதி உதவி மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முழுமையாகவும், கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் ஓரளவும் அகற்ற முடியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த சுமார் 70 ஆயிரம் பேரை மறுகுடியமர்த்த ஏற்கனவே இங்கிலாந்து அரசு அறக்கட்டளை மூலம் 30 லட்சம் பவுண்டு நிதி உதவி செய்துள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது நடந்ததாக சேனல்–4 வெளியிட்ட வீடியோ ஆவண படம் காட்டும் இதயத்தை உறைய வைக்கும் கொடூர போர் குற்றம், மனித உரிமை மீறல் சம்பவங்கள் இந்த பகுதியில் நடந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.