பெற்ற குழந்தையை விற்க முயன்ற தம்பதியர்

Written by vinni   // November 17, 2013   //

brazil_sale_002பிரேசிலில் இணையதளத்தின் மூலம் குழந்தையை விற்க பெற்றோர் விளம்பரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இணையத்தளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரேசில் நாட்டு தம்பதி ஒருவர், பொருட்களை விற்கும் பிரபல இணையதளம் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தனர்.

இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது, எங்கள் குழந்தை தொடர்ந்து அழுது தொல்லை தருகிறது. எனவே குழந்தையை விற்க விரும்புகிறோம். ரூ.27 ஆயிரம் விலை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த எண் மற்றும் முகவரியை விசாரித்த போது அது போலி என்று தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இணையதள நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மறுநாளே அந்த விளம்பரத்தை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குழந்தையின் புகைப்படத்தை வைத்து, விளம்பரம் வெளியிட்ட தம்பதியை பொலிசார் தேடி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.