மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தல்! அப்துல்லா யாமீன் வெற்றி

Written by vinni   // November 17, 2013   //

maladive_president_001மாலைத்தீவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றுள்ளார்.
மாலைத்தீவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 9ம் திகதியன்று முதற்கட்டமாக நடந்தது.

இதில் முன்னாள் ஜனாதிபதியும், ஜனநாயக கட்சி தலைவருமான முகமது நஷீத்துக்கு 46.4 சதவிகித வாக்குகளும், மாலைத்தீவு முன்னேற்ற கட்சித் தலைவரும், முன்னாள் சர்வாதிகாரி மவுமூன் அப்துல் கயூமின் சகோதரருமான அப்துல்லா யாமீனுக்கு 30.3 சதவிகித வாக்குகளும் கிடைத்தன.

இதனையடுத்து 2ம் கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது, இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதில், யாரும் எதிர்பாராத வகையில் அப்துல்லா யாமீன் 51.39 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி முகம்மது நஷீத், 48.61 சதவிகித வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிவுகள் குறித்து, மாலைத்தீவு தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுகிறது.

இதனையடுத்து நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் அப்துல்லா யாமீன் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.


Similar posts

Comments are closed.