இளவரசர் சார்லசுக்கு அரசு பென்ஷன்

Written by vinni   // November 17, 2013   //

charles_birthday_002பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு 65 வயதாகி விட்டதால், அரசு பென்ஷன் தரப்பட உள்ளது.
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ். இவர் கடந்த 14ம் திகதி தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனையடுத்து இவருக்கு அரசு பென்ஷன் தரப்படஉள்ளது. இதற்காக அவர் விண்ணப்பித்தும் உள்ளார்.

அவருக்கு வாரத்துக்கு 11025 ரூபாய் பென்ஷன் என்ற வகையில் மாத பென்ஷன் நிர்ணயிக்கப்படும்.

இந்த பணத்தை அவர் அறக்கட்டளைக்கு செலவிட உள்ளார். ஏகப்பட்ட சொத்துக்களை வைத்துள்ள சார்லசுக்கு நேரடியாக வருவாய் தருவது கார்ன்வால் கோட்டை மற்றும் அதை சார்ந்த சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகையும் தான்.

இந்த சொத்துக்கள் மட்டும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பரப்பு கொண்டது.

அதிகளவு சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட சார்லஸ், 2008ம் ஆண்டு 560 நிகழ்ச்சிகளிலும், 2010ல் 499 மற்றும் 2011 ல் 600 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.


Similar posts

Comments are closed.