இணைய தளத்தை கலக்கும் இந்தியா

Written by vinni   // November 17, 2013   //

social networkingஇந்தியாவில் இணையதள பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக இணையம் மற்றும் இந்திய மொபைல் சங்கம் அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இணையதள பார்வையாளர்கள் மற்றும் பயனீட்டாளர்களின் எண்ணைக்கை 205 மில்லியனை எட்டியுள்ளது.

மேலும் 2014ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இது 243 மில்லியனை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்தியாவின் நகர் புறங்களில் இந்த அண்டு அக்டோபர் மாதம்வரையிலான இணைய பயன்பாட்டாளர்கள் 137 மில்லியன் பேர் என்றும் அது டிசம்பர் மாதத்துக்குள் 141 மில்லியனை தொடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிராமபுறங்களில் 2012ம் ஆண்டு யூன் முதல் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதையும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகிலேயே இணைய பன்பாட்டளர்கள் எண்ணிக்கையில் 300 மில்லியன் பேரை கொண்டு சீனா முதல் இடத்திலும் 207 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்ட அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இந்தியாவை பொருத்தவரை பெருநகரங்களில் தான் இணைய பயன்பாட்டாளர்கள் அதிகம்பேர் உள்ளனர். மும்பையில் 12 மில்லின் பேர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் நாட்டிலேயே அதிக இணையதள பன்பாட்டாளர்கள் மும்பையில்தான் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லியில் 8.1 மில்லியன் பேர்களும், ஹைதராபாத்தில் 4.7 மில்லியன் பேர்களும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இணையதள பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருவதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.