பள்ளி மாணவி முன்பு நிர்வாண நடனம்

Written by vinni   // November 17, 2013   //

arrest_CIதமிழ்நாட்டில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள பாலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மாணவி 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று இவரது பெற்றோர் வெளியே சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த மாணவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வாலிபர் பரத் என்கிற ராஜேஷ்குமார்(28), மாணவி வீட்டுக்கு வந்தார். திடீரென அந்த வாலிபர் மாணவியின் முன்பு தனது ஆடைகளை களைந்து வீசினார்.

பின்னர் தொலைக்காட்சியில் ஓடிய பாட்டுக்கு ஏற்ப நடனமாடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நிர்வாண கோலத்தில் நின்ற ராஜேஷ் குமாரை பிடித்தனர். அருகில் இருந்த துணியால் போர்த்தி நிர்வாண கோலத்தை மறைத்து பாலூர் பொலிசில் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலூர் பொலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்துள்ளார்.


Similar posts

Comments are closed.