வாடகை பணத்தை செலுத்த செனல் 4 ஊடகவியலார்கள் உறுதியளிப்பு

Written by vinni   // November 16, 2013   //

channel4_01-300x169அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேனின் வாடகை பணத்தை செலுத்த செனல் 4 ஊடகவியலாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் குறித்த வேனின் சாரதி கடந்த 14ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

கொழும்பில் இருந்து ரயிலில் வவுனியா சென்ற செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதனால் அநுராதபுரத்தில் இருந்து செனல் 4 ஊடகவியலாளர்கள் வேனில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனினும் அவர்கள் பயணித்த வேனுக்கான 30,000 ரூபா வாடகை பணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து அதன் சாரதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த வாடகை பயணத்தை வழங்குவதாக செனல் 4 ஊடகவியலாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்த வேனின் சாரதிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.