பாகிஸ்தானில் மாணவர்கள் உயிருடன் எரித்துக் கொலை

Written by vinni   // November 16, 2013   //

fire-366x275முஹர்ரம் பண்டிகைகையொட்டி பாகிஸ்தானில் நேற்று பல இடங்களில் நினைவு ஊர்வலங்கள் நடைபெற்றன.
ராவல்பிண்டி அருகே உள்ள காரிசன் நகரில் சன்னி பிரிவினர் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது ஷியா அரபு பாடசாலை அருகே வந்த போது, சிலர் சன்னி மக்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.
இதனை தொடர்ந்து மதரசாவுக்குள் ஆவேசமாக நுழைந்தவர்கள், கண்ணில் பட்டவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

சிலரை உயிருடன் தீ வைத்தும் எரித்துக் கொன்றனர்.
இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் 10 பேர் பலியாகினர், பொலிசார் உட்பட 35க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவ வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்


Similar posts

Comments are closed.