முதியவரை கொடூரமாக கொலை செய்து நாக்கு, இதயத்தை சாப்பிட்ட நபரால் பரபரப்பு

Written by vinni   // November 16, 2013   //

eating_bacon_man_001பிரான்சில் 90 வயது முதியவரை கொலை செய்து அவரது இதயம் மற்றும் நாக்கை சாப்பிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெற்கு பிரான்சில் ஸ்பெயின் எல்லை அருகில் உள்ள கிராமம் ஒன்றிற்கு நேற்று மாலை 26 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் வந்தார்.

இவர் திடீரென ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த முதியவரை(வயது 90) இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின் அவரின் இதயம் மற்றும் நாக்கை வெட்டியெடுத்து சாப்பிட்டுள்ளான்.

அதன்பின்னரும், பிணத்தை எரித்து விட்டதுடன் வீட்டையும் தீ வைத்து கொளுத்தியுள்ளான்.

பக்கத்து வீட்டில் வசித்த முதியவரின் மகன், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளான்.

இதனையடுத்து தப்பிச் சென்ற நபரை, பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அந்த முதியவரை கொலை செய்யுமாறு யாரோ தெரிவித்ததாக கூறியுள்ளார், இச்சம்பவத்தால் அங்குள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


Similar posts

Comments are closed.