பீர் பாட்டிலில் விநாயகரா? மன்னிப்பு கேட்ட அவுஸ்திரேலியா

Written by vinni   // November 16, 2013   //

beer_bottle_001அவுஸ்திரேலியா நாட்டில் இந்துக்கடவுளின் படங்களை பீர் பாட்டில் லேபிள்களில் அச்சிட்ட மதுபான நிறுவனம், இந்துக்களின் எதிர்ப்பினை அடுத்து மன்னிப்பு கேட்டதோடு கடவுள் படங்களை நீக்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய விநாயகர், லட்சுமி, நெற்றிக்கண், பாம்பு போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது.

இதனைக் கேள்விப்பட்ட அவுஸ்திரேலியாவாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இத்தகைய தெய்வ உருவங்களை மதுபாட்டில்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும்.

மேலும் இந்துமதக் கடவுள்கள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றை வணிகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துதல் கூடாது. இந்த செய்கை இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்றும் தெய்வங்களின் உருவங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பீர் பாட்டில்களை அந்த மதுபான நிறுவனம் திரும்பப் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்துக் கடவுள்களின் உருவம் அச்சடித்த லேபிள்களுடன் இனி அந்த பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இணையதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.