இந்தியா இலங்கையின் மனித உரிமை மீறல்களை பதிவு செய்ய வேண்டும்!

Written by vinni   // November 16, 2013   //

rathakirusnanஇலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பதிவு செய்ய வேண்டும் என, பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போருக்குப் பின் நடைபெற்றுவரும் தவறுகள் குறித்து, 54 நாடுகள் கலந்துகொண்டுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பதிவுசெய்ய வேண்டும்.

தவறினால், தேர்தலின்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.