முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்புக்கு எதிராக வைகோ, சீமான் ஆர்ப்பாட்டம்

Written by vinni   // November 16, 2013   //

mu14தஞ்சாவூர் விளார் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் பொலிசாரால் இடிக்கப்பட்டதைக் கண்டித்து வைக்கோ மற்றும் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதனை கண்டித்தும், பழ.நெடுமாறன் கைதை கண்டித்தும் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழக அரசை கண்டித்து சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன்பு மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தமிழக அரசை கண்டிக்கும் வகையில் தேனியிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கலில் மதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 25 பேர் பங்கேற்றனர். அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் சீமான் தனது மனைவி கயல்விழியுடன் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழ் சமுதாயத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்று சுவர் இடித்து அகற்றப்பட்டது. பழ.நெடுமாறனை கைது செய்ததும் கண்டனத்துக் குரியதாகும்.

இந்த இடிப்பு நிகழ்வுக்கு முன்தினம் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இச்சுவரை இடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்க வில்லை. இதை சட்டப்படி எதிர்கொள்வோம்.

காமன்வெல்த் மாநாட்டிற்கான எதிர்ப்பை திசை திருப்புவதற்கே முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டு இருப்பதாகவே கருத வேண்டி இருக்கிறது. ஈழப் போர் நடக்கும்போதும், காமன்வெல்த் மாநாட்டை கண்டித்தும் ஒருவர் கூட பதவி விலகவில்லை.

இதில் கருணாநிதி, ஜெயலலிதா என பேதம் இல்லை. எந்த அதிகாரம் நம்மை அடிமையாக்குகிறதோ அந்த அதிகாரத்தை இனிவரும் காலத்தில் இல்லாமல் ஆக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Similar posts

Comments are closed.