வங்க கடலில் புயல் சின்னம்: இன்று மாலை கரையை கடக்கிறது

Written by vinni   // November 16, 2013   //

Vietnam Asia Typhoonவங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை உட்பட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்துள்ளது.

புயலால் மழை மேலும் தீவிரம் அடையலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல்மருத்துவம் தேர்வு தவிர மற்ற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.