வடக்கு நோக்கிய எங்கள் பயணத்தை தடுத்தது யார்!- கெலும் மக்ரே கேள்வி

Written by vinni   // November 16, 2013   //

callum-macrae-channel-4வடக்கு நோக்கி சென்ற தமது பயணத்தை நிறுத்தியது யார் என்று சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே கேள்வி எழுப்பியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊடக நிலையத்தில் நேற்று அவரிடம் கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டார்.

வடக்கில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன் உண்மையான நிலைமையை அறிந்து கொள்ளவே நாங்கள் வடக்கு நோக்கி சென்றோம்.

எனினும் அது தடுக்கப்பட்டது. எங்களை அங்கு செல்ல விடாது தடுத்தது யார் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம் என்றார்.


Similar posts

Comments are closed.