பார்வையாளர்கள் அதிர்ச்சி நிமிடம்

Written by vinni   // November 15, 2013   //

miss_universe_0052013ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக வெனிசுலா அழகி கேப்ரியலா இஸ்லர் மகுடம் சூட்டினார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 2013ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது.

இந்த போட்டியில் 86 நாடுகளைச் சேர்ந்த அழகிககள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வெனிசுலா அழகி கேப்ரியலா இஸ்லர் வென்றார்.

25 வயதாகும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.

இவருக்கு கடந்தாண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஒலிவியா கல்போ கிரீடத்தை சூட்டினார்.

அப்போது அந்த கிரீடன் அவரது தலையில் இருந்து கீழே நழுவி விழுந்து விட்டது.

உடனே அதை கேப்ரியலாவும், கல்போவும் பிடித்துவிட்டனர்.

இதனை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.


Similar posts

Comments are closed.