தாய்ப்பால் கொடுத்தால் பரிசு!

Written by vinni   // November 15, 2013   //

baby_milk_002தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை ஊக்குவிக்கும் வகையில் பரிசுக் கூப்பன்களை இங்கிலாந்து அரசு வழங்கி வருகிறது.
இங்கிலாந்திலேயே டெர்பிஷெரி, சவுத் யார்க்ஷெரி போன்ற இடங்களில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் குறைவாக உள்ளது.

இதற்கு காரணம், தங்களது அழகு குறைந்து விடுமோ என தாய்மார்கள் தயங்குவது தான்.

ஆனால் தாய்ப்பால் தருவதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, தாய்க்கும் நன்மை பயக்கும் என அவர்களுக்கு தெரிவதில்லை.

எனவே புதிதாக திட்டமொன்றை அறிமுகப்படுத்தியது, அதாவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி குழந்தைக்கு 6 வாரம் வரையில் தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு ரூ.12 ஆயிரமும், 6 மாதங்கள் வரையில் பால் கொடுக்கும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.8 ஆயிரமும் வெகுமதியாக வழங்கப்பட்டது.

அந்த கூப்பன்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, உபயோகமான பொருட்கள் வாங்குவார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கூப்பனைப் பெற்ற பெரும்பான்மையானவர்கள் அதனைப் பயன்படுத்தி சிகரெட், மது போன்ற போதைப் பொருட்களைத் தான் வாங்கியுள்ளார்களாம். இதனால் அரசாங்கம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதாம்.


Similar posts

Comments are closed.