பிலிப்பைன்ஸ் சென்றது அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்

Written by vinni   // November 15, 2013   //

us_aircraft_carrier_001பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்தது. இதையடுத்து அமெரிக்க விமானம்தாங்கி கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் லெய்தே தீவுக்கு சென்றடைந்தது.
21 ஹெலிகாப்டர்களுடன் சென்றுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் கப்பலில் மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மற்றும் மருந்து பொருள்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களுக்கு தேவையான பொருள்கள் வழங்கப்படும் என்றும் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் தனது இயந்திரத்தைப் பயன்படுத்தி அது, தானே சுத்தமான குடிநீரையும் வழங்கும் என்றும் அமெரிக்க கடற்படை செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் எமது இந்த உதவி நடவடிக்கை மூலம் பிலிப்பைன்ஸில் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார். இதே போல் பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் பாதித்த மக்களுக்காக ஒரு லட்சம் டாலர் நிவாரண நிதி கொடுப்பதாக சீனா அறிவித்திருந்தது.

இந்நிலையில் இது போதாது என்று விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த நாடு மேலும் 16 லட்சம் டாலர்களை வழங்க முன்வந்துள்ளது.


Similar posts

Comments are closed.