சோதனையை சந்தித்த காலண்டர்!

Written by vinni   // November 15, 2013   //

calaபேப்பர் விலை உயர்வு, தொடர் மின்தடை போன்ற காரணங்களால் காலண்டர் ஆர்டர் குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டு பிறந்து விட்டால் புத்தக கடை, பேன்சி கடைகளில் புத்தாண்டு காலண்டர் வாங்க கூட்டம் அலைமோதும்.

புத்தாண்டை முன்னிட்டு பெரிய கடைகளில் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது நிறுவனம் சார்பில் தயாரித்து தங்கள் ஊழியர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவார்கள்.

தமிழகத்தில் சிவகாசி, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள அச்சகங்களில் சுவாமி படங்கள், இயற்கை காட்சிகள் போன்ற பல படங்களில் காலண்டர் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் பல ஆயிரம் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பேப்பர் விலை, பசை, அட்டை, மின் கட்டண உயர்வு, மின் தடை போன்ற காரணங்களால் இந்தாண்டு காலண்டர் தயாரிப்பில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே வெளியிடங்களில் இருந்து அதிக ஆர்டர் வரும். இந்தாண்டு போதிய ஆர்டர்கள் வரவில்லை என்று பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ரூ.20க்கு விற்ற சாதாரண தினசரி காலண்டர் இந்தாண்டு ரூ.25 ஆக உயர்ந்துள்ளது. 10, 15 அளவு காலண்டர் ரூ.15லிருந்து ரூ.20க்கும், 10, 15 இன்ச் லேமினேசன் காலண்டர் ரூ.20லிருந்து ரூ.25க்கும், 20, 15 இன்ச் காலண்டர் ரூ.72லிருந்து ரூ.86க்கும், 20, 15 இன்ச் மாத காலண்டர் ரூ.20லிருந்து ரூ.24க்கும், 20, 30 இன்ச் மாத காலண்டர் ரூ.44லிருந்து ரூ.52க்கும் விற்கப்படுகிறது.

வெளியிடங்களில் இருந்து வரும் ஆர்டர்கள் முற்றிலும் குறைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.