கேரளாவில் ரயில், கார் வாங்கிய தாத்தா சார்லஸ்

Written by vinni   // November 15, 2013   //

prince_charles_001.w245ஒன்பது நாள் பயணமாக இந்தியா வந்திருந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், தனது பேரன் ஜார்ஜ்க்காக விளையாட்டு கார், ரயில் போன்ற பொம்மைகளை வாங்கிச் சென்றுள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது மனைவி கமீலாவுடன் 9 நாள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்தார்.

வடமாநிலங்களைச் சுற்றிப் பார்த்த சார்லஸ்-கமீலா தம்பதியினர் சில தினங்களுக்கு முன்னர் கேரளா சென்றனர். நேற்று கேரளாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றார்.

நேற்று தனது 65வது பிறந்தநாளைக் கேரளாவில் கொண்டாடினார். அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

இந்தியச் சுற்றுப்பயணத்தில் ஏராளமான கலைப் பொருட்கள் வாங்கியுள்ளார். நேற்று கேரளாவிலும் சில கலை நயம் மிக்கப் பொருட்களை அவர்கள் வாங்கினார்கள்.

குறிப்பாக தனது குட்டிப்பேரனும், இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் மகனுமாகிய ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிசுக்கான பொம்மைகள் வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

இயற்கையான தாவரச் சாயம் பூசப்பட்ட கார், ரயில் போன்ற பொம்மைகள் உட்பட சிலவற்றை அவர்கள் தங்களது பேரனான ஜார்ஜூக்காக வாங்கியுள்ளார்கள்.

கேரள பயணம் குறித்து சார்லஸ் கூறுகையில், கேரள மக்கள் பெருந்தன்மையுடன் வரவேற்றனர். அவர்களை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது . ஆனால் இந்திய வெயில் தான் தங்களை மிகவும் வாட்டி எடுத்து விட்டதாக என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.