முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்: காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை – வாசன்

Written by vinni   // November 15, 2013   //

mu14இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் மத்திய அரசு விரைவாக செயல்படும் என மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மேலும் கூறியதாவது:

இலங்கை தமிழர்களின் வாழ்க்கை மேம்பட – அவர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு துணை நிற்கும்.

8 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்லவில்லை.

மத்திய அரசின் பிரதிநிதியாக மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டு உள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்கு துணையாக இருக்கவேண்டும் என்பதில் இந்திய அரசு சரியான முடிவு எடுத்து உள்ளது.

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் என்கிற நினைவு சின்னம் அமைத்தது காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. ஏற்புடையதும் இல்லை.


Similar posts

Comments are closed.