கமரூன் யாழ். செல்கிறார் போராட்டம் காலையிலேயே ஆரம்பம்

Written by vinni   // November 15, 2013   //

david-cameron-inter_791872cபிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் யாழ். விஜயத்தை முன்னிட்டு நல்லூர் ஆலய முன்றலில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (15) காலை நடத்தப்பட்டது.

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கெடுப்பதற்காக இலங்கை வந்த பிரிட்டன் பிரதமர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்.

யாழ். விஜயத்தை முன்னிட்டு அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நல்லூர் ஆலய முன்றலில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை காணாமல் போனவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் தமது உறவுகள் பற்றி தெரியப்படுத்துமாறு கோரி உறவுகள் கதறி அழுதார்கள்.

அதேவேளை, யாழ். விஜயம் செய்யும் பிரிட்டன் பிரதமர் யாழ். பொது நூல் நிலையத்தில் மாலை 3 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

பொது நூல் நிலையத்தில் இச்சந்திப்பு நடைபெறும் வேளை, பொது நூல் நிலையம் முன்பாக காணாமல் போனவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.