உலகின் பிரச்சினைகளுக்கு ஒரு சிகிச்சை முறையாக பொதுநலவாயம் அமைய வேண்டும்

Written by vinni   // November 15, 2013   //

charles-camilla-450x279உலகில் உள்ள பிரச்சினைகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் மாறாக அவற்றுக்கு தீர்வினை பெற பொதுநலவாய அமைப்பு முயற்சிக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

தாமரை தடாக அரங்கில் இன்று (15) அரம்பமான 23வது பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப உரையில் இளவரசர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகின் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையாக பொதுநலவாயம் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005ம் ஆண்டு சுனாமியின் பின்னர் இலங்கை பல கஸ்டங்களை எதிர்கொண்டதாகவும் அதனை தனது 2005ம் ஆண்டு இலங்கை விஜயத்தின் போது தான் கண்டுகொண்டதாகவும் இளவரசர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி சார்பில் மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்தமைக்கு சார்ள்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானிய மகாராணி தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டதாகவும் பொதுநலவாய சாசனம் ஒரு மைல்கல் என அவர் கூறியதாகவும் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து தலைவர்களுக்கும் தனது மகிழ்ச்சியை வெளியிட்டதாகவும் இளவரசர் சார்ள்ஸ் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.