அரைசதம் அடித்தார் சச்சின்: 16 ஆயிரம் ஓட்டங்களை தாண்டுவாரா?

Written by vinni   // November 15, 2013   //

sachinமும்பையில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதன் மூலம், 200 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார் சச்சின்.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அரைச்சதம் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

சச்சின் டெண்டுல்கர் 91 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் 68வது டெஸ்ட் அரைச்சதம் இதுவாகும்.

இந்த டெஸ்டில் சச்சின், 115 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் 16 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றவர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்(168), ஸ்டீவ் வாக்(168) ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இந்தியாவின் ராகுல் டிராவிட்(164), தென் ஆப்ரிக்காவின் காலிஸ்(164) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


Similar posts

Comments are closed.