ஒபாமாவின் வெள்ளை மாளிகை போல் வீட்டை மாற்றிய ஆசாமி

Written by vinni   // November 14, 2013   //

whiஅமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டை ரூ.1.5 கோடி செலவு செய்து வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் லாங்வியூ என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரோன் வாடோ (63).

இவருக்கு லாரா (36) என்ற மனைவியும், வாலன்டினா (16), லாரா (10) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் ரூ.1.5 கோடி செலவு செய்து ஒரு குட்டி வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார்.

இதனை காண அமெரிக்கர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து ரோன் வாடோ கூறுகையில், எனக்கு 13 வயதாக இருக்கும் போது சீனியர் புஷ் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

அப்போது முதல் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதிகளை பற்றியும், வெள்ளை மாளிகை பற்றியும் தெரிந்து கொண்டேன். கடந்த 40 ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதிகளான இரண்டு புஷ்களும் எனக்கு நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர்.

நான் எனது வீட்டை ஒரு குட்டி வெள்ளை மாளிகைபோல் மாற்றிய புகைப்படத்தை புஷ்ஷிடம் காண்பித்த போது அச்சு அசலாக இருப்பதாக பாராட்டினார் என்று தெரிவித்தார்.

இவர் வீட்டையே ஒரு குட்டி அருங்காட்சியகமாக மாற்றிவிட்டார். எப்போதும் மியூசியத்தில் வசிப்பது போல் உள்ளது என அவரது மகள்கள் கேலி செய்கின்றனர். முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய நாற்காலி, பேனா, போட்டோ என ஏராளமான பொருட்களை தனது சேகரிப்பில் வைத்திருக்கிறார்.

இவரது சேகரிப்பிலேயே முதன்மையானது முன்னாள் ஜனாதிபதி கென்னடி பயன்படுத்தி பின்னர் லிங்கன் வைத்திருந்த காரை தற்போது இவர் வைத்துள்ளார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது என்கிறார் தனது கணவர் குறித்து பெருமையுடன் அவரது மனைவி லாரா.


Similar posts

Comments are closed.