தெரு நாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

Written by vinni   // November 14, 2013   //

dogதெருவில் அனாதரவாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாய் ஒன்றிற்கு திடீர் அதிர்ஷ்டமாக எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட முதல் நாய் என்ற பெருமை கிடைத்துள்ளது.

காஷ்மீரில் லே எனும் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த நாயை முன்னாள் கோப்ல் வீராங்கனையான ஜோன் லெப்சன் என்பவர் கண்டு, இரக்கப் பட்டு தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த நாய்க்கு ரூபி எனப் பெயரிட்ட வீராங்கனை, அதனை தன்னுடன் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ரூபியின் எவரெஸ்ட் பயணம் குறித்த புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் லெஃப்சன்.

இந்த சாதனைப் பயணத்தின் மூலம், எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் செல்லப் பட்ட முதல் நாய் என்ற பெருமையைப் பெற்றுள்ளது 11 மாத ரூபி.

ரூபி குறித்து லெப்சன் கூறும்போது, ‘ரூபி குறித்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். சில நாட்கள் மட்ட்மே உடன் வைத்திருக்கலாம் என நினைத்துத் தான் நான் ரூபியை உடன் அழைத்துச் சென்றேன், ஆனால், என்னை மேலும் பயணம் செய்ய தூண்டியதே ரூபி தான்.

ரூபியின் இச்சாதனை மூலம் தெரு நாய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றார்.

மேலும், ரூபிக்கு பனியின் சுவை மிகவும் பிடித்துள்ளதாகவும், பனியில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார் லெப்சன்.

லெப்சன் தன்னுடன் உலகம் சுற்றிய தனது முன்னாள் செல்லப்பிராணியான ஆஸ்கர் என்ற நாய்க்கு தன்னுடைய புத்தகம் ஒன்றை சமர்ப்பணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.