காமன்வெல்த் தொடர்பில் இந்தியாவின் முடிவை மதிக்கிறேன் : கெமரூன்

Written by vinni   // November 14, 2013   //

Commonwealthபிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் புது டில்லியில் இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

இந்தியாவிலிருந்து இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் இவர், அதற்கு முன்பு கல்கத்தா செல்கிறார்.

பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவுக்கு சுற்றுபயனத்தை மேற்கொண்டுள்ள டேவிட் கெமரூன் நேற்று புதுடில்லி வந்தடைந்தார்.

பின்னர் இன்று மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையான வர்த்தகம், தொடர்புகள், பாதுகாப்பு, சர்வதேச பிரச்சினைகள் மற்றும் தீவிரவாதம் குறித்தும் பேச்சு நடத்தினார்.

பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கெமரன், இந்தியா , இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து எடுத்துள்ள முடிவை தான் மதிப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் தாம் கலந்துக் கொள்வதன் மூலம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகளை குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் இதன் மூலம் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுடில்லியில் இருந்து கல்கத்தா செல்லும் இவர் அங்கு கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். பின்னர் அகில இந்திய வானொலிக்கு பிரத்யேக பேட்டி அளிக்கும் அவர் அங்கிருந்து கொழும்புக்கு செல்கிறார்.


Similar posts

Comments are closed.