ஜப்பானில் திருமணங்களை நடத்தி வைக்கும் ரோபோ (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 14, 2013   //

japan_robot_marriage_002ஜப்பானில் இளம் தலைமுறையினரை ரோபோக்கள் அதிகம் கவர்ந்து வருகிறது.
ரோபோக்களை வடிவமைப்பதில் ஜப்பானியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருமணங்களில் மணமக்களின் நண்பனாகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளராகவும் செயல்படும் அதிநவீன ரோபோக்களை ஜப்பானிய நிபுணர் ஜான் ஷிமிங் வடிவமைத்துள்ளார்.

ரோபோக்களின் செயல்பாடுகளில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பலரும், ரோபோக்களை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

அதிக அளவில் ஆர்டர் குவிந்துள்ளதால் பல்வேறு ரோபோக்களை வடிவமைக்கும் பணியில் ஜான் மூழ்கியுள்ளார்.

இதுகுறித்து ஜான் ஷிமிங் கூறுகையில், சிறு வயது முதலே ரோபோக்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். அனைத்து வீடுகளிலும் ரோபோக்களின் பயன்பாடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வீட்டு வேலைகளை செய்யும் ரோபோவை வடிவமைத்தேன்.

அதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அந்த ரோபோவை என் நண்பன், அவனின் உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளில் அறிமுகப்படுத்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.

திருமணங்களில் பயன்படும் வகையிலான ரோபோவாக அதை மாற்றி அமைக்கும் புதிய திட்டம் தீட்டினேன். இதன் மூலம் தற்போதுள்ள, இந்த புதிய ரோபோ தயாரானது.

இது திருமணங்களில், மணமகனின் தோழன் அல்லது மணமகளின் தோழியாக செயல்படும் திறன் படைத்தது. திருமணச் சடங்குகளை நடத்தி வைக்கும் புரோகிதராகவும் பயன்படுத்தலாம்.

அனைவரையும் மகிழச்சி அடையச் செய்யும் இந்த ரோபோவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

விரைவில், பெரும்பாலான திருமணங்களில் இந்த ரோபோ பயன்படுத்தப்படும் சூழல் உருவாகும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.