யார் அம்மா ? தேர்தல் ஆணையம்

Written by vinni   // November 14, 2013   //

jayalalitha7அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்டவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரைப் பெற்றுள்ள தேர்தல் ஆணையம், அம்மா என்பது யாரைக் குறிக்கிறது என்று விளக்கம் கேட்டுள்ளது.
ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுகவினர் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில், தமிழக அரசு சார்பில் சேலம் மாநகராட்சியில், அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

அதில் முதல்வர் படம் ஒட்டப்பட்டுள்ளது. அம்மா என்ற வார்த்தை முதல்வரை குறிக்கிறது. எனவே அந்தப் பெயர் மற்றும் முதல்வர் புகைப்படத்தை மறைக்க வேண்டும்.

மேலும் சேலம் மாநகரில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது. அம்மா குடிநீர் பாட்டிலில் அதிமுக சின்னம் மற்றும் முதல்வரின் படம் இடம்பெற்றுள்ளது என்று கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து புகாருக்குள்ளான துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் அம்மா என்பது யாரைக் குறிக்கிறது அதன் விரிவாக்கம் என்ன என்றும் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணைம் விளக்கம் கேட்டுள்ளது.


Similar posts

Comments are closed.