துபாயில் ஜிம்பாப்வே பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்த இந்தியருக்கு சிறை தண்டனை

Written by vinni   // November 13, 2013   //

jailதுபாயில் ஜிம்பாப்வே பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இந்தியருக்கு 3 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

துபாயில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை செய்து வந்த 23 வயது இந்திய வாலிபர் தன்னிடம் ‘லிப்’டில் தகாத முறையில் நடந்து கொண்டதாக 21 வயது ஜிம்பாப்வே மாணவி போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மாணவியின் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையிலான காட்சிகள் கேமிராவில் பதிவாகி இருந்ததால் அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பிடிபட்ட வாலிபரே குற்றத்தை ஒப்புக்கொண்டதால் 3 மாத சிறை தண்டனை வழங்குகிறேன்’ என்று தீர்ப்பளித்தார்.


Similar posts

Comments are closed.