37000 மாணவர்களை டிஸ்மிஸ் செய்த பல்கலைகழகம்

Written by vinni   // November 13, 2013   //

Campusஜேர்மனியில் உள்ள பல்கலைகழகம் ஒன்று 37000 மாணவர்களின் பெயர்களை ஒரே நேரத்தில் நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Dresden என்ற பல்கலைகழக தனது மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது.

அதில், உங்களது லொகினை லொக் செய்ய இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கிறது, நீங்கள் மாணவர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள், உங்களது கான்ட்ராக்ட் ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை படித்து பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிலர், பல்கலைகழக கட்டணம் கட்டியதற்கான ரசீதுகள், சான்றிதழ்கள் போன்றவற்றை இணைத்து பதில் அனுப்பி இருந்தனர்.

குறிப்பாக பல்கலைகழகத்தின் விக்கிபீடியா பக்கத்திலும், மாணவர்களின் எண்ணிக்கை 0 என்ற இருந்துள்ளது.

இதுகுறித்து பல்கலைகழகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறுகையில், மென்பொருள் மூலம் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தவறு ஏற்பட்டுள்ளது.

இதற்காக வருந்துகிறோம், தவறுகள் சரிசெய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.