போர் முடிந்தாலும் வடக்கில் இன்னும் ஆசிரியர்கள் காணாமல் போகின்றனர்!

Written by vinni   // November 13, 2013   //

ceylon_teacher_dissaper வவுனியா அல் -அமியா முஸ்லிம் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக பணியாற்றி வந்த கார்த்திகேசன் நிரூபன் என்பவர் கடந்த 9 ஆம் மாதம் 19 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.இதுவரை அவர் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தை நிரந்த இருப்பிடமாக கொண்ட இந்த வவுனியாவில் தற்காலிகமாக வசித்து வந்தார்.

கடந்த 9 ஆம் மாதம் 19 ஆம் திகதி வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகில் நகர சபைக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்ற அவர் இதுவரை திரும்பி வரவில்லை.

அத்துடன் அவர் காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை அவரை பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

ஆசிரியர் காணாமல் போனமை குறித்து அவரது தாய் வவுனியா பொலிஸாரிடம் 2013-09-28 ஆம் திகதி முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை பொலிஸார் தகவல்கள் எதனையும் வழங்கவில்லை.

அத்துடன் அவரது தாய், மனித உரிமை ஆணைக்குழு, வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்திகேசன் நிரூபன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தி துரிதமான விசாரணைகளை நடத்துமாறுமாறு ஆசிரியர் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

போர் முடிவுக்கு வந்து 4 வருடங்களுக்கு மேல் கடந்துள்ளதுடன் வடக்கில் மக்களின் வாழ்க்கை வழமை நிலைமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அங்கு இன்னும் ஆட்கள் காணாமல் போய்க் கொண்டிருப்பது பாரதூரமான நிலைமை மட்டுமல்ல கவலைக்குரிய நிலைமையுமாகும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.