தமிழர்களின் 6000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிக்கும் ராணுவ நடவடிக்கையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் தர்ணா

Written by vinni   // November 13, 2013   //

Navaneethampillay_Jaffna_05இலங்கையில் நடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் சிங்கள ராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு தமிழர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் அவர்கள் அபகரித்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இல்லாத வேளையில், ராணுவத்தினர் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டின் முதல் பிரதமராக யாழ்ப்பாணம் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை ராணுவத்தினர் நிறுத்தக்கோரி நூற்றுக்கணக்கானோர் யாழ்ப்பாணத்தில் 5 நாள் தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து வடக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவுன்சிலர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியதாவது:-

யாழ்ப்பாணம் வடக்கு செக்டர் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழர்களின் 6000 ஏக்கர் நிலங்கள் அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்காக அப்பகுதிகளில் உள்ள வீடுகளை ராணுவம் இடித்து அழித்து வருகிறது. இப்பகுதியில் தமிழர்களின் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமிக்கும் ராணுவத்தின் நடவடிக்கையை நிறுத்த வேண்டி நாங்கள் இங்கு 5 நாள் தர்ணா போராட்டம் நடத்துகிறோம். நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் சிலரும் நீதிமன்றத்தில் இதுகுறித்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.