இலங்கை அரசை அச்சுறுத்தும் போரில் மாண்ட அப்பாவிகளின் ஆவிகள்

Written by vinni   // November 13, 2013   //

puthumaththaalan_002இது இலங்கையின் ஒரு சுற்றுலா சொர்க்கபூமி கடற்கரை அல்ல. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக நகரமாக இருந்த புதுமாத்தளன் படுகொலைகளின் நரகமாகியது.
அந்த பகுதியில் குப்பைகள் இன்னும் சிதறிக்கிடக்கின்றன.

இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளின் புரட்சிப் படையினருக்கும் இடையில் புதுமாத்தளன் பகுதியில் நடைபெற்ற போரில் புலிகளின் படையினை இலங்கை அரசு தோற்கடித்தது ஆசியாவின் மிக நீண்டகால உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

விடுதலைப்புலிகள் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் குடிமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இந்த பகுதியை பாதுகாப்பான பகுதி என்றும் போர் தவிர்ப்பு வலயம் என்றும் அறிவித்திருந்த இலங்கை அரச தனது போர் நடவடிக்கைகளை மனிதாபிமான பணி என்று தம்பட்டம் அடித்து கொண்டது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் பிரகாரம் 2009 ஆம் ஆண்டு 40 ஆயிரம் அப்பாவி இலங்கை வாழ் தமிழ் குடிமக்கள் பாதுகாப்பான பகுதி அறிவிக்கப்பட்ட பகுதியில் வைத்தே கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த அப்பாவி தமிழ் மக்களின் உடமைகள், பொதிகள், குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், காலனிகள் மற்றும் உடைகள் அந்த பகுதியில் இன்றும் சிதறிக் கிடக்கின்றன.

அரசு அறிவித்த பாதுகாப்பு பகுதியில் இருந்து உயிர் தப்பிய தயாகி என்ற பெண் போராளி போரில் தனது கணவனை இழந்து ஒரு காலையும் இழந்து உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கின்றார்.

அவரது சக போராளியாகிய மற்றுமொருவர், கையின் கீழ் பகுதியில் காயமடைந்து ஒரு கால் செயழிந்த நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

தியாகியின் கணவனை கைது செய்த இலங்கை அரச படையினர் அவரை கொலை செய்து விட்டு மாரடைப்பால் இறந்து போனதாக அறிவித்தது.

இந்த கடற்கரையின் நினைவுகள் ஆவிகளாக மாறி பேய்களாக வந்து இலங்கை அரசை 50 உலக தலைவர்கள் கூடியிருக்கும் உச்சி மாநாட்டில் அச்சுறுத்தி வருகின்றன.

ஐக்கிய நாடுகளினால் போர்க்குற்றவாளியாக கருதப்பட்டு, மனித உரிமை அமைப்புகளினால் போர் குற்றவாளியாக குற்றவாளியாக தீர்க்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதியை மனித உரிமைகள், ஜனநாயக பொறுப்புமிக்க, சட்டத்தின் ஆட்சிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட அமைப்பாகிய பொதுநலவாய அமைப்பின் தலைவராக இரண்டு வருடங்களுக்கு பொறுப்பேற்க உள்ளமையானது வருந்தத்தக்க ஒன்றாகும்.

40 ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்தவருடன் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கைகுலுக்க போகின்றார்.

இந்திய மற்றும் கனேடிய தலைவர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க போகின்றனர். பிரதமர் டேவிட் கமரூன், இலங்கை ஜனாதிபதியிடம் காணாமல் போன மற்றும் இறந்தவர்களின் கணக்கினை புள்ளவிபரப்படி தருமாறு உச்சி மாநாட்டை ஒரு கருவியாக பயன்படுத்தி வலியுறுத்த போகின்றார்.


Similar posts

Comments are closed.