மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்

Written by vinni   // November 13, 2013   //

jayalalithaஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன்பின்னர் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் காங்கிரஸ் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுதான் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார்.

தீர்மானத்தை வரவேற்று வழிமொழிவதாக தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இவ்வாறு பல்வேறு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்தபிறகு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேறியபோது காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் அவையில் இல்லை.

ஜெ.குரு எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இக்கூட்டத்தில் பா.ம.க. பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.