மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவிருந்த பொதுநலவாய மாநாட்டு அரச தலைவர்களின் பயணம் இரத்து

Written by vinni   // November 13, 2013   //

Commonwealthமட்டக்களப்புக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்யவிருந்த பொதுநலவாய மாநாட்டு அரச தலைவர்களின் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநட்டில் கலந்துகொள்ளும் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மட்டக்களப்புக்கு இன்று மாலை வருகை தந்து இரண்டு தினங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிடயிருந்தனர்.

இந்நிலையில், இவர்களின் வருகை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்புக்கு வருகை தரவிருந்த பொதுநலவாய மாநாட்டு அரச தலைவர்களை வருகையையொட்டி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் சிவில் சமூக அமைப்பு என்பன பாரிய ஏற்பாடுகளை செய்திருந்தன. இந்நிலையில் இவர்களின் இரத்து செய்யப்பட்டமையானது தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ஏற்கனவே மட்டக்களப்புக்கு இளவரசர் சார்ள்ஸ் உட்பட வெளிநாட்டு அரச தலைவர்கள் வருகை தருவதாக இருந்தது. இதற்காக இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவர் மற்றும் பொதுநலவாய மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து பார்வையிட்டும் சென்றிருந்தனர்.

பின்னர் இளவரசர் சார்ள்ஸ் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டு பொதுநலவாய மாநட்டில் கலந் கொள்ளும் இருபது நாடுகளின் அரச தலைவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தருவார்கள்’ என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.