இலங்கையில் மூன்று வருடங்கள் சித்திரவதை செய்யப்பட்டேன் : கனேடிய தமிழர் , ஐநா மனித உரிமை குழுவில் முறைப்பாடு

Written by vinni   // November 13, 2013   //

13496003-grunge-flag-of-united-nations-image-is-overlaying-a-detailed-grungy-textureஇலங்கையில் சுமார் மூன்று வருடங்கள் தான் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி 43 வயதுடைய ரோய் சமாதானம் என்ற கனேடிய தமிழர் ஒருவர் ஐநா மனித உரிமை குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தான், பிளாஸ்டிக் குழாய் மற்றும் ரி-56 ரக துப்பாக்கி போன்றவற்றால் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமை குழுவில் தான் செய்த முறைப்பாடு குறித்து டொரொன்டோவில் இன்று (13.11.13) ஊடக சந்திப்பு நடத்தி ரோய் சமாதானம் தெளிவுபடுத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனக்கு நடந்தவை என்னவென்று உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நபரே கூறுவது சிறந்தது என ரோய் சமாதானத்திற்கு சட்ட உதவி அளித்துவரும் கடனாவின் சர்வதேச நீதி உதவி மையத்தின் சட்ட இயக்குநர் மேட் ஈசென்பிரேன்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் பொதுநலவாய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் ஐநா மனித உரிமை குழுவில் இவ்வாறானதொரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.


Similar posts

Comments are closed.