டேவிட் கேமரூன் நாளை கொல்கத்தாவுக்கு வருகை

Written by vinni   // November 13, 2013   //

david kemarunஇங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு வருகை தரவுள்ளார்.

சுமார் 6 மணி நேரம் இங்கு தங்கியிருக்கும் அவர், ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர், ஆகில இந்திய வானொலிக்கு பிரத்யேக பேட்டியளிக்கும் டேவிட் கேமரூன், கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்டு வரும் இந்திய அருங்காட்சியகத்தை பார்வையிட்டு கொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த குறுகிய நேர சுற்றுப்பயணத்தின் போது மேற்கு வங்களா மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை அவர் சந்திப்பாரா? என்ற உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.


Similar posts

Comments are closed.