நீச்சல் உடை அணிந்து கலக்கலாக போஸ் கொடுத்த அழகி (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 12, 2013   //

miss_universe_003மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ள வெனிசுலாவின் கேப்ரியலா இஸ்லர், 10 லட்சம் டொலர் மதிப்பிலான நீச்சல் உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
மாஸ்கோவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் வெனிசுலாவின் கேப்ரியலா இஸ்லர் பட்டம் வென்றார்.

இதையடுத்து மாஸ்கோவின் கன்சர்ட் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் மிஸ் யுனிவர்ஸ் என்ற அந்தஸ்துடன் 10 லட்சம் டொலர் மதிப்பிலான நீச்சல் உடையில் தோன்றி போஸ் கொடுத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிஸ் யுனிவர்ஸ் அழகியாக எனது முதல் நாளை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் ரொம்ப சாதாரணமான பெண், எளிமையானவள். இரவெல்லாம் எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் போனில் பேசிப் பேசிக் களித்தேன்.

வெனிசுலாவைச் சேர்ந்த ஏழாவது மிஸ் யுனிவர்ஸ் அழகி நான் என்பது கெளரவமாக உள்ளது என்றும், 85 பேரை தோற்கடித்து பட்டத்தை வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உடை குறித்து கூறுகையில், மிகவும் எளிமையான உடை தான், ஆனால் கம்பீரமாக காட்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 900 கற்களை கொண்டு இந்த உடையை உருவாக்கியுள்ளனர்.


Similar posts

Comments are closed.