கொழும்பு – யாழ் விமான சேவை நிறுத்தம்

Written by vinni   // November 12, 2013   //

chennai air portயாழ். – கொழும்புக்கு இடையிலான விமான சேவை திங்கட்கிழமை (11) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேற்படி விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபொழுது,

விமான சேவை நிறுத்தப்பட்டதிற்கான காரணம் தங்களுக்கு தெரியாதென்றும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் மீண்டும் விமான சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு இன்று (12) விஜயம்மேற்கொண்ட கனேடியப் பிரதிநிதிகள் ஏ – 9 வீதியின் வழியாகவே சென்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.