இலங்கை காமன்வெல்த் விவகாரம்: ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: கருணாநிதி

Written by vinni   // November 12, 2013   //

m-karunanidhi_7காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது இதுகுறித்து பேரவையில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் பற்றி திமுக தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், எந்தத் தீர்மானமாக இருந்தாலும், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். சென்னையில் திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் கருணாநிதி இதனை வலியுறுத்தினார்.


Similar posts

Comments are closed.