தென் ஆப்ரிக்கா அணி 117 ஓட்டங்களால் அபார வெற்றி

Written by vinni   // November 12, 2013   //

south afirikaதென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு ராச்சியத்தில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 117 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்து ஒருநாள் போட்டித்தொடரை தென் ஆப்ரிக்கா அணி 4க்கு ஒன்று என்ற விகிதத்தில் கைப்பற்றியுள்ளது.


Similar posts

Comments are closed.