கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

Written by vinni   // November 12, 2013   //

commanஇலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ள கூடாது. இந்த மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என கூறி தமிழகத்தில் வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

நாகை மாவட்டம் சீர்காழி கச்சேரி சாலையில் தனியார் லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் உள்ளது.

இந்த கோபுரம் சுமார் 100 அடி உயரம் கொண்டது. இந்த செல்போன் கோபுரத்தில் இன்று காலை 9.15 மணியளவில் வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் கோபுரத்தின் உச்சிச்கு சென்றார்.

பின்னர் அவர் அங்கிருந்து குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ள கூடாது. இந்த மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என கூறி மிரட்டல் விடுத்தார்.

ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் சீர்காழி தாசில்தார் விஜயன், டி.எஸ்.பி. பாலகுரு, இன்ஸ்பெக்டர்கள் அப்துல் கபூர், சுகுணா மற்றும் பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.

செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் வைத்திருந்த செல்போன் மூலம் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவரை கீழே இறங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர் இறங்க மறுத்தார். அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் தற்கொலை மிரட்டல் விடுத்தவர் பெயர் பாபு (வயது 30) என்பதும் சீர்காழி அருகே உள்ள நெப்பத்தூரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

இவர் தமிழர் எழுச்சி இளைஞர் கழக மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Similar posts

Comments are closed.