பொதுநலவாய நாடுகளுக்கு இடையில் பொருளாதார இடைவெளி காணப்படுகின்றது – ஜனாதிபதி

Written by vinni   // November 12, 2013   //

sri-lanka-president-mahinda-rajapaksa-in-commonwealthபொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையில் பாரியளவில் பொருளாதார இடைவெளி காணப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் வர்த்தக அமர்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டு;ள்ளார்.

1971ம் ஆண்டு முதல் இந்த முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வறுமையை இல்லாதொழிப்பது குறித்து பேசப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான தீர்வுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடந்த கால பிரகடனங்களில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க இதுவரையில் வறுமை ஒழிப்பு தொடர்பில் காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி அடையாத நாடுகளின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.