கோலாகலமாக நடந்த பாராட்டு விழா (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 12, 2013   //

sachin_honour_002சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெறும் சச்சினுக்கு, மும்பையில் பிரமாண்டமான அளவில் பாராட்டு விழா நடந்தது.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர்(வயது 40), தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறார்.

இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கம்(எம்.சி.ஏ) சார்பில், சச்சினுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.

இதில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அணி வீரர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

விழாவில் மும்பையில் உள்ள கண்டிவ்லி மைதானத்துக்கு சச்சின் டெண்டுல்கர் ஜிம்கானா எனப் பெயர் சூட்டப்பட்டது.

விழாவில் சச்சின் பேசுகையில், இந்திய அணிக்காக விளையாடிய காலங்கள் என்றென்றும் நினைவில் நிற்கும்.

மும்பை கிரிக்கெட் கிளப்பிற்கு(எம்.சி.ஏ) எனது பெயரை சூட்டியது மகிழ்ச்சி, இதை வாசிக்கும் போது ஸ்பெஷலாக உணர்கிறேன்.

இந்த கிளப்புக்கு எனது பெயர் வைப்பர் என எதிர்பார்க்கவே இல்லை, இது வித்தியாசமான அனுபவம்.

தவிர, நான் விரும்பிய நேரங்களில் எல்லாம் பயிற்சி செய்து கொள்ள அனுமதித்த எம்.சி.ஏ.,க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நமது நாட்டில் விளையாட்டு கலாசாரத்தை தொடர்வது மிகவும் முக்கியம். சரியான வழிகாட்டல், பயிற்சி வசதி மற்றும் சரியான வசதிகள் இருந்தால் தான் இவை நடக்கும். வரும் சந்ததிகளுக்கு இவையெல்லாம் கிடைக்க வேண்டும்.

இப்போது எம்.சி.ஏ., இதற்கு சரியான பிளாட்பார்மாக உள்ளது என நினைக்கிறேன், இதை அடுத்து வரும் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எம்.சி.ஏ., சங்கத் தலைவர் சரத் பவார் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த அபூர்வ மனிதர் சச்சின். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் வியத்தகு சாதனை படைத்தவர்.

இவர் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, விளையாட்டு சமூகத்திற்கும் சிறந்த தூதராக உள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக இந்தியாவுக்கு பல சிறப்பான தருணங்களை ஏற்படுத்தி கொடுத்த சச்சினுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.